பயோமெட்ரிக் முறைக்காக, ஆதாரில் இனிஷியல் பெயருக்கு முன்னர் இருந்தால் இனிஷியலை பெயருக்குப் பின்னர் இருக்கும்படி மாற்ற வேண்டும் என்பதாக பத்திரிக்கைச் செய்தி ஒன்று வந்துள்ளது. இது நடைமுறையில் வீண் அலைச்சல்களையே உருவாக்கும். இதனைத் தவிர்த்து செயலியில் தொழில்நுட்பரீதியாக மாற்றங்கள் செய்து வடிவமைக்கப்பட்டால் வீண் அலைச்சல்கள் தவிர்க்கப்படுவதுடன் பின்னாட்களில் ஆதார் கோரப்பட்டு வழங்கப்படும் சேவைகளின்போது ஏற்படும் சிரமங்கள் தவிர்க்கப்படும்.

உதாரணமாக PAN CARD - ல் இனிஷியல் பெயருக்கு முன்னர் இருக்கும். இப்போது அதனை மாற்றினால் அங்கே பொருந்தாது. எனவே ஆசிரியர் பெயரை வைத்து Attendance App வடிவமைக்க வேண்டும். வடிவமைப்பில் மாற்றம் செய்து கொண்டால் எளிதாகிவிடும். அதை தவிர்த்து எல்லோரையும் ஆதாரில் மாற்றம் செய்யச் சொல்வது தொழில்நுட்ப வளர்ச்சியின் வீழ்ச்சி.
  
பாஸ்போர்ட் - ல் இனிஷியல் பெயருக்கு முன்னரே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. வெளிநாடு செல்கையில் அனுமதியின்போதே பிற சூழல்களிலோ ஆதார் கேட்கப்பட்டால் அப்போது அவசர சூழலில் மாற்றிக்கொண்டு இருப்பது தொல்லை. எனவே ஆதாரில் இனிஷயல் பெயருக்கு முன்னரா அல்லது பின்னரா என்பதில் அரசு தெளிவாக வரையறுக்க வேண்டும். அவ்வப்போது மாற்றிக் கொண்டே இருந்தால் அந்த அட்டை அர்த்தமற்றதாகி விடும்.
  
ஆசிரியர் சங்கங்கள் இதனை கல்வித்துறையின் கவனத்திற்குக் கொண்டு செல்வது பயனளிக்கும்