எலும்புகளுக்கு இடையே திரவம் (Synovial fluid) இருப்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். இந்தத் திரவம் குறையும்போது இடைவெளி உருவாகிறது. அப்போது எலும்புகளை அசைக்கும்போது சத்தம் உண்டாகிறது. இதைத்தான் சொடக்கு என்கிறோம். சொடக்குப் போடுவதால் நன்மை ஒன்றும் இல்லை.