Tuesday, December 11, 2018

SCHOOL MORNING PRAYER ACTIVITIES - 12.12.2018

Image result for SCHOOL MORNING PRAYER ACTIVITIES


திருக்குறள்


அதிகாரம்:
நடுவுநிலைமை

திருக்குறள்:117

கெடுவாக வையா துலகம் நடுவாக
நன்றிக்கண் தங்கியான் தாழ்வு.

விளக்கம்:

நடுவுநிலைமை தவறாமல் அறவழியில் வாழ்கிற ஒருவருக்கு அதன் காரணமாகச் செல்வம் குவியாமல் வறுமை நிலை ஏற்படுமேயானால் அவரை உலகம் போற்றுமே தவிரத் தாழ்வாகக் கருதாது.

பழமொழி

Speech is silver , silence is gold

அமைதியே ஆரவாரத்தை விட சிறந்தது

இரண்டொழுக்க பண்புகள்

* விலங்குகள், பறவைகள் மற்றும் ஊர்வன போன்ற பிற உயிர்களை கல்லால் அடித்து கஷ்டப் படுத்த  மாட்டேன்.

* சிறு உயிரினங்கள் அடிபட்டு கிடந்தால் அவைகளை
பெரியவர்கள் உதவியுடன் மருத்துவரிடம் அழைத்துச் செல்லவோ அவற்றிற்கு மருந்து இடவோ முயற்சிப்பேன்.

 பொன்மொழி

எத்தனை தடைகள் குறுக்கிட்டாலும், உள்ளத்தில் நம்பிக்கை மட்டும் இருந்து விட்டால் ஒருவரின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது.

      - பாரதியார்

பொதுஅறிவு

1.இந்தியாவின்  வெளியுறவு துறை அமைச்சர் யார்?

திருமதி.சுஷ்மா சுவராஜ்

2. இந்தியாவின் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை அமைச்சர் யார்?

திருமதி.மேனகா காந்தி

தினம் ஒரு பாரம்பரிய உணவுப் பொருளின் மகத்துவம்

தர்பூசணி
1. தர்பூசணியின் மொத்த எடையில் 92% தண்ணீர், 6% சர்க்கரை சத்து என்பதால் வெயிலுக்கு மிகவும் உகந்தது. விட்டமின் அதிகம்  நிறைந்துள்ள பழமாக இப்பழம் திகழ்கிறது.

2. நீரிழிவு நோய், இதய நோய், ரத்தக் கொதிப்பு உள்ளவர்கள், உடல் பருமனாக உள்ளவர்கள் இந்த பழத்தை தாராளமாக சாப்பிடலாம். இந்த பழத்தில் இரும்பு சத்து அதிகமாக உள்ளது.

English words and meaning

Visual.
பார்வை தொடர்பான
Volley.     சரமாரி
Vitiate.    சீர்குலைத்தல்
Vocal.
குரல் தொடர்பான
Vigour.   சுறுசுறுப்பாக

அறிவியல் விந்தைகள்

தவளை

* உலகின் மிகப் பெரிய தவளைக்கு கோலியாத் தவளை என்று பெயர்.
* அண்டார்டிகா கண்டத்தில் தவளைகள் கிடையாது.
* தவளைகள் தங்கள் முட்டையை தூய நீரில் தான் இடும்
* ஏறக்குறைய 4,700 வகை தவளைகள் உலகில் உள்ளன.
* ஒவ்வொரு வகை தவளைக்கும் வேறு வேறு சத்தம் உண்டு. இவைகளின் சத்தம் ஒரு மைல் தூரம் வரை கேட்கும்

நீதிக்கதை

கந்தசாமி என்ற ஒரு ஏழை தன் மனைவியுடன் சிறு குடிசை ஒன்றில் வாழ்ந்து வந்தான். வயதாகி விட்டதால் வேலைக்கும் செல்ல முடியாது போகவே, தங்களிடம் இருந்த பொருட்களை விற்று சாப்பிட வேண்டி ஏற்பட்டது. நாட்கள் செல்லச்செல்ல…அவர்கள் உண்ண உணவின்றி தவித்தனர்.

இந்நிலையில் அவன் ஆண்டவனை நோக்கி …’இறைவா எங்களை ஏன் இப்படி படைத்தாய்…இது இப்படியே நீடித்தால்….வறுமை தாங்காது…நாங்கள் இறப்பதை தவிர வேறு வழியில்லை’ என வேண்டினான்.

அவன் மீது இரக்கம் கொண்ட இறைவன் அவன் முன் தோன்றி அவனின் குறைகளைத்தீர்க்க….அவனுக்கு வாத்து ஒன்றை பரிசளித்தார். அந்த வாத்து தினம் ஒரு பொன் முட்டை இடும் என்றும்…அதை விற்று அன்றடம் குடும்பத்திற்கு தேவையானவற்றை வாங்கி வாழ்நாளைக் சந்தோஷமாக கழிக்கலாம் என்றும் கூறி மறைந்தார்.

வாத்து தினம் ஒவ்வொரு பொன் முட்டையிட …அவர்கள் அதனை விற்று வாழ்கையை இனிதாகக் கழிந்தனர்.

ஒரு நாள் கந்தசாமியின் மனைவி தன் கணவனிடம் சென்று ‘தினம் தினம் இந்த வாத்து ஒவ்வொரு பொன் முட்டையே இடுகின்றது, இப்படியே இருந்தால் நாம் எப்படிப் பெரிய பணக்காரர் ஆவது என்று சொல்லி, இந்த வாத்தின் வயிற்றில் இருக்கும் எல்லா முட்டைகளையும் நாம் எடுத்தால் அதை விற்று பெரிய பணக்காரர் ஆகிவிடலாம் என்று ஒரு உபாயம் சொன்னாள்.  இதைக் கேட்ட கந்தசாமிக்கும் அது சரியெனப் தோன்றியது.

உடனே, கந்தசாமி அந்த வாத்தைப் பிடித்து வாத்தின் வயிற்றில் இருக்கும் எல்லா முட்டைகளையும் எடுக்க வாத்தை கொன்று அதன் வயிற்றைக் கிழித்தான். “ஆ” என்ன ஆச்சரியம் அந்த வாத்தின் வயிற்றில் ஒருமுட்டையுமே இருக்கவில்லை. அதன் வயிறில் மற்றைய வாத்துகள்போல் வெறும் குடலே இருந்தது கண்டு ஏங்கினர்.

தினம் ஒரு பொன் முட்டையிட்ட வாத்து இறந்து விட்டதால், வறுமை அவர்களை மீண்டும் சூழ்ந்துகொண்டது.

தங்கள் பேராசையே பெரும் தரித்திரத்தை தந்தது என மனம் வருந்தி ஏழ்மையாகவே வாழ்ந்து உண்ண உணவின்றி இறந்தனர்.

ஆசை அளவுக்கு மிஞ்சினா; அது பேராசை. பேராசை பெரு நஷ்டத்தையும் கஷ்டத்தையும் தரும்.

இன்றைய செய்திகள்

12.12.2018

* ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரியான சக்திகாந்த தாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

* நடந்து முடிந்த 5 மாநில சட்டசபை தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

* கூகுளின் சமூக வலைத்தளமான கூகுள் பிளஸ்சில் மீண்டும் கண்டறியப்பட்ட 'பக்' எனப்படும் கோளாறின் காரணமாக, பயனாளர்கள் ஐந்து கோடி பேரின் தகவல்கள் அம்பலத்திற்கு வந்துள்ளது.

* ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அன்மோல்ப்ரீத் சிங், கெளல் அபாரம்: 3-0 என நியூஸிலாந்து ஏ அணியைத் தோற்கடித்த இந்திய ஏ அணி!

* உலகக் கோப்பை ஹாக்கி போட்டியின் காலிறுதிக்கு இங்கிலாந்து, பிரான்ஸ் அணிகள் தகுதி பெற்றுள்ளன.

Today's Headlines

🌹Retired IAS officer Sakthikanth Das has been appointed as the new governor of the Reserve Bank.

🌹Results of the five state assembly elections have been announced.

🌹 Google's social website, in Google Plus, which was once again recovered the disorder" BAC"which came to reveal 5 crore people's information .

🌹 Anomalit Singh and Kulle played excellently in one-day cricket match.India defeated  New Zealand A-team 3-0.

🌹England and France have qualified for the quarterfinals of the World Cup hockey tournament💐

Prepared by
Covai women ICT_போதிமரம்

No comments:

Post a Comment

SSLC STUDY MATERIAL

PLUS TWO STUDY MATERIAL

SSLC TIME TABLE 2013-2014

PLUS TWO TIME TABLE 2013-2014

DSE NEW STUDY MATERIAL – CHENNAI

DSE- NEW STUDY MATERIAL –CHENNAI

SSLC HALF YEARLY KEY ANSWERS 13-14

+2 HALF YEARLY KEY ANSWERS 13-14

SSLC OLD DSE MATERIAL

PLUS TWO OLD DSE MATERIAL

SSLC EXAM TIPS

PLUS TWO EXAM TIPS

SSLC NEW STUDY MATERIAL

+2 NEW STUDY MATERIAL

SSLC OLD STUDY MATERIAL

+2 OLD STUDY MATERIAL

SSLC QUESTION PAPERS

PLUS TWO QUESTION PAPERS

SYLLABUS(UP DATED SOON)

SYLLABUS

உங்களிடம் உள்ள SSLC&+2 மாணவர்கள் பயனடையும் வகையில் முக்கிய வினா மற்றும் விடை குறிப்புகள் அனுப்ப மறவாதீர் EMAIL ID- tamilagaasiriyar@gmail.com

TAMILAGAASIRIYAR ANDROID APP

TAMILAGA ASIRIYAR Headline Animator

JOIN - TEAM TAMILAGAASIRIYAR

நமது வலைத்தளத்தினை மொபைலில் கண்டுகளியுங்கள்.

நண்பர்களே தோழர்களே இப்பொழுது.நமது வலைதளம்! www.tamilagaasiriyar.com உங்களது மொபைல்போனில் காணலாம் உங்களுக்குகாக,நீங்கள் எளிதில் காணும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது.andirod phone user can view this website in ibrowser.nokia symbain phone user மற்றும் other phone users can download click this link opera உங்கள் மொபைல் போன்காண சரியான சாப்ட்வேர்னை தேர்ந்தெடுத்து install செய்யவும்.மேலும் உதவிக்கு இங்கு கிளிக் செய்யவும்


join face book :
https://encrypted-tbn3.gstatic.com/images?q=tbn:ANd9GcTcAYOyioELqDvJ8QjJ176Yaje7MihRaAlj3dF56_XBBbGU6NmGiwthank you!