வாட்ஸ்அப் ஆப்யில் பிக்சர் இன் பிக்சர் மோட்
(பி.ஐ.பி.) ஆண்ட்ராய்டு பீட்டா செயலியில் அக்டோபர் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த அம்சம் வீடியோக்களை வாட்ஸ்அப் ஆப்யில் இருந்தபடியே பார்க்க வழி செய்யும். யூடியூப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் மற்ற வெப்பிசைட்களில் இருக்கும் வீடியோக்களை வாட்ஸ்அப் PIP. மோட் சப்போர்ட் செய்கிறது.கடந்த சில மாதங்களாக டெஸ்ட் செய்யப்பட்டு வந்த PIP. வசதி ஒருவழியாக அனைவருக்கும் வழங்கப்படுகிறது. புதிய PIP. மோட் வசதி வாட்ஸ்அப் வெர்ஷன் 2.18.280 வழங்குகிறது. இதுதவிர ஆப்யில் மேலும் பல்வேறு புதிய வசதிகளை வாட்ஸ்அப் வழங்க இருக்கிறது.


வாட்ஸ்அப் ஐபோன் ஆப்யில் சமீபத்தில் க்ரூப் காலிங் பட்டன் வழங்கப்பட்டது. இந்த அம்சம் விரைவில் ஆண்ட்ராய்டு செயலியிலும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்சமயம் க்ரூப் ஆடியோ அல்லது வீடியோ கால் மேற்கொள்ள முதலில் ஒருவரை அழைத்து, அதன்பின் மற்றவர்களை அழைப்பில் சேர்க்க வேண்டும்.
புதிய வசதி வழங்கப்படும் போது, அழைக்க வேண்டியவர்களை அழைப்புக்கு முன்னதாக சேர்க்க முடியும். இதேபோன்று ஆப்யில் டார்க் மோட் வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த வசதி வழங்கப்படும் பட்சத்தில் பயனர்களின் ஸ்மார்ட்போன்களில் பேட்டரி பேக்கப் நேரத்தை அதிகப்படுத்த முடியும். குறிப்பாக OLED எஸ்பெக்ட் ஸ்கிரீன் கொண்ட ஸ்மார்ட்போன்களில் அதிக பலன்கள் கிடைக்கும்.
ஏற்கனவே வாட்ஸ்அப் ஆப் யில் டிராப் டவுன் நோட்டிஃபிகேஷன் பேனல் வழங்கப்பட்டது. இந்த வசதி நோட்டிஃபிகேஷன் டிராப் டவுன் பேனலில் இருந்தபடி போட்டோ மற்றும் வீடியோக்களின் பிரீவியூக்களை காண்பிக்கும்