Sunday, January 13, 2019

உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெற தகுதிவாய்ந்தவர்கள் பட்டியல் விவரம் அனுப்ப அரசு உத்தரவு.

உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெறுவதற்கு தகுதியான ஆசிரியர்களின் பெயர்ப்பட்டியலை வழங்குமாறு அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.


தகுதியான ஆசிரியர்களை கண்டறிந்து அவர்களின் பெயர்,தரவரிசை எண் உள்ளிட்ட விபரங்களை அனுப்ப அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வி இயக்குநர் ராமேஸ்வர முருகன் உத்தரவிட்டுள்ளார். பதவி உயர்வு பெறுவதற்கு தகுதியான விதிமுறைகளையும் பள்ளிக்கல்வி இயக்குநரகம் வெளியிட்டுள்ளது.

அவற்றின் படி, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவிக்கு, 2001 முதல் 2003 வரை உள்ள ஆண்டுகளில் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் தேர்வு செய்யப்பட்ட முதுகலை ஆசிரியர்களே பதவி உயர்வு பெற தகுதியானவர்கள் ஆவர்.

மேலும், கருணை அடிப்படையில் நியமிக்கப்பட்டவர்கள், இதற்கு முன்பு தலைமையாசிரியர் பதவிக்கு தகுதி பெறாமல், தற்போது 2019 ஜனவரி 1-ம் தேதி நிலவரப்படி தகுதி உடையவர்களின் பெயர்களை பதவி உயர்விற்கு முதன்மைக்கல்வி அலுவலர்கள் பரிந்துரை செய்யவேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. 

உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவிக்கு, 2012 மற்றும் 2013-ம் ஆண்டின் படி, பணி வரன்முறை செய்யப்பட்டு, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களாகவோ, அல்லது உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களாவோ தகுதி பெறாதவர்களின் பெயர்களை 2019 ஜனவரி 1-ம் தேதி நிலவரப்படி இனம் கண்டு, பரிந்துரைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. 

மேலும், ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டவர்களின் பெயர்களை பரிந்துரைக்க கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவர்களின் பெயர்களை, முதன்மைக்கல்வி அலுவலர்களே நேரிடையாக ஆய்வு செய்து, அடையாளம் கண்டு சமர்ப்பிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களாக தற்போது பணியாற்றுபவர்கள், மாவட்டக்கல்வி அலுவலர் அல்லது மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் என்ற எதேனும் ஒன்றிற்கு மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

No comments:

Post a Comment

SSLC STUDY MATERIAL

PLUS TWO STUDY MATERIAL

SSLC TIME TABLE 2013-2014

PLUS TWO TIME TABLE 2013-2014

DSE NEW STUDY MATERIAL – CHENNAI

DSE- NEW STUDY MATERIAL –CHENNAI

SSLC HALF YEARLY KEY ANSWERS 13-14

+2 HALF YEARLY KEY ANSWERS 13-14

SSLC OLD DSE MATERIAL

PLUS TWO OLD DSE MATERIAL

SSLC EXAM TIPS

PLUS TWO EXAM TIPS

SSLC NEW STUDY MATERIAL

+2 NEW STUDY MATERIAL

SSLC OLD STUDY MATERIAL

+2 OLD STUDY MATERIAL

SSLC QUESTION PAPERS

PLUS TWO QUESTION PAPERS

SYLLABUS(UP DATED SOON)

SYLLABUS

உங்களிடம் உள்ள SSLC&+2 மாணவர்கள் பயனடையும் வகையில் முக்கிய வினா மற்றும் விடை குறிப்புகள் அனுப்ப மறவாதீர் EMAIL ID- tamilagaasiriyar@gmail.com

TAMILAGAASIRIYAR ANDROID APP

TAMILAGA ASIRIYAR Headline Animator

JOIN - TEAM TAMILAGAASIRIYAR

நமது வலைத்தளத்தினை மொபைலில் கண்டுகளியுங்கள்.

நண்பர்களே தோழர்களே இப்பொழுது.நமது வலைதளம்! www.tamilagaasiriyar.com உங்களது மொபைல்போனில் காணலாம் உங்களுக்குகாக,நீங்கள் எளிதில் காணும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது.andirod phone user can view this website in ibrowser.nokia symbain phone user மற்றும் other phone users can download click this link opera உங்கள் மொபைல் போன்காண சரியான சாப்ட்வேர்னை தேர்ந்தெடுத்து install செய்யவும்.மேலும் உதவிக்கு இங்கு கிளிக் செய்யவும்


join face book :
https://encrypted-tbn3.gstatic.com/images?q=tbn:ANd9GcTcAYOyioELqDvJ8QjJ176Yaje7MihRaAlj3dF56_XBBbGU6NmGiw



thank you!