Image result for ஜெயகுமார்

ஆசிரியர்கள், மனிதநேயத்துடன் போராட்டத்தை கைவிட வேண்டும்,'' என, பள்ளி கல்வித்துறை அமைச்சர், செங்கோட்டையன் கூறினார்.அவர் அளித்த பேட்டி:அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், தங்களின் போராட்டத்தை வாபஸ் பெற்று, பணிக்கு திரும்ப வேண்டும். பொதுத்தேர்வு நடக்க உள்ள நேரத்தில், வேலைநிறுத்தம் என்பது, மாணவர்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தும். எனவே, போராட்டத்தை, ஆசிரியர்கள் வாபஸ் பெற வேண்டும்.கோரிக்கைகள் குறித்து, அரசு தரப்பில் உரிய முடிவுகள் எடுக்கப்படும். ஆசிரியர்கள், மனிதநேயத்துடன் செயல்பட்டு, போராட்டத்தை வாபஸ் பெற வேண்டும்.இவ்வாறு, செங்கோட்டையன் கூறினார்.மீன் வளத்துறை அமைச்சர், ஜெயகுமார் அளித்த பேட்டி:அரசுக்கு நிதி பற்றாக்குறை உள்ளது; நிதி நிலைமை சீராகும் போது, கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும். நிதியை பொறுத்து தான், உறுதி தர முடியும். கோரிக்கைகளை பரிசீலிக்க அமைக்கப்பட்ட கமிட்டிகள், அறிக்கை தந்துள்ளன. உரிய நேரத்தில், நடவடிக்கை எடுக்கப்படும். அரசின் நிலையை உணர்ந்து, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும்.இவ்வாறு, ஜெயகுமார் கூறினார்.