Image result for annauniversity
சென்னை:'அண்ணா பல்கலை நடத்திய, டிசம்பர் தேர்வு மதிப்பீட்டில், குளறுபடி நிகழ்ந்துள்ளதால், விடைத்தாள்களை மறு திருத்தம் செய்ய வேண்டும்' என, மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 அண்ணா, பல்கலை, தேர்வு, மதிப்பீட்டில்,குளறுபடி?


அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள, இன்ஜினியரிங் கல்லுாரிகளுக்கு, 2017ல், புதிய பாட திட்டம் மற்றும் தேர்வு முறை அமலுக்கு வந்தது.இந்த முறையில், சில பாடங்களில் தேர்ச்சி பெறாத மாணவர்கள், அடுத்த, 'செமஸ்டர்' எனப்படும், அடுத்த பருவ தேர்வில், அதை எழுத முடியாது. மாறாக, ஓராண்டு கழித்தே,தேர்ச்சி பெறாத பாடத்துக்கு, தேர்வு எழுத முடியும். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து,

மாணவர்கள் போராட்டம் நடத்தினர். ஆனால், புதிய தேர்வு முறையை மாற்ற, பல்கலை துணை வேந்தர் சுரப்பா மறுத்து விட்டார். 

இந்த பிரச்னை குறித்து, சமூக ஆர்வலர்கார்த்திக், மாணவர்கள் ஆகாஷ் ராய், அன்பரசன், தமிழினியன் உள்ளிட்டோர் அளித்த பேட்டி: அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள, தனியார் கல்லுாரிகளில், போதிய பேராசிரியர்கள் இல்லை; கட்டமைப்பு வசதிகளும் இல்லை. அவற்றை, கண்டு கொள்ளாத பல்கலை, மாணவர்களை பாதிக்கும் தேர்வு முறையை மட்டும், அறிமுகம் செய்துள்ளது.

தேர்ச்சி பெறாத பாடங்களுக்கான தேர்வை எழுது வதற்கு, புதிய தேர்வு முறையில், கூடுதல் காலம் தேவைப்படுகிறது. அதனால், மாணவர்கள், உரிய காலத்தில், படிப்பை முடிக்க முடியாத சூழல் உள்ளது. சமீபத்தில், நவம்பர், டிசம்பரில் நடந்த செமஸ்டர் தேர்வு முடிவுகள் வெளியாகின. அதில், விடைத்தாள் திருத்தத்தில் குளறுபடிகள் நிகழ்ந்துள்ளன.


நன்றாக படிக்கும் மாணவர்களும், வேண்டும் என்றே, 'பெயில்' ஆக்கப்பட்டது போல தெரிகிறது. விடைத்தாள்களை மறுகூட்டல் செய்ய, கட்டணம் வசூலிக்கப் படுகிறது. அதன்வழியே, பல்கலைக்கு கோடி கணக்கில் வருவாய் கிடைக்கும்.விடைத்தாள் மதிப்பீட் டில் சந்தேகம் எழுந்துள்ளது. எனவே, விடைத்தாள்களை, எந்த கட்டணமும் இன்றி, மறுமதிப்பீடு செய்ய வேண்டும். அதேபோல, 2017ல் அறிமுகம் செய்யப்பட்ட, தேர்வு முறையை ரத்து செய்து, 2013ம் ஆண்டு முறையை அமல்படுத்த வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்