Image result for CPS

CPS திட்டத்தில் - 17 வருடமாக பிடித்தம் செய்யப்பட்ட ரூ 50,000 கோடி ஊழியர்களின் சேமிப்பு பணம் காணவில்லை. ( 10% ஊதியத்தில் பிடித்தம் செய்யப்படுகிறது ) 1 ரூ கூட முறையாக சேமிப்பகத்தில் சேர்க்கவில்லை.

17 வருடத்தில் CPS திட்டத்தில் உயிரிழந்த அரசு ஊழியர்களிள் _1 ரூ கூட தன் சேமிப்பை பெற இயலாத குடும்பங்களின் கண்ணீர் கூறும் CPS ன் அவல நிலையை ...

கடந்த 8 மாதங்களில் 9000 அரசு துறை பணியிடங்கள் மறைமுகமாக நீக்கம்.

LKG , UKG பள்ளிகளில் சேர மாண்டேச்வரி மழலையர் படிப்பினை படித்திருக்கும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கி இருக்கலாம். ஆனால்இருப்பவர்களை வைத்தே நிரவல் செய்வது - வேலை பளுவை தருகிறதே தவிர _ LKG , UKG படிக்கும் கல்வி சூழலை மீட்க போவதில்லை.

ஆங்கில மீடியம் என்ற பெயரில் துவங்கப்பட்டு - ஆசிரியர்கள் நியமிக்காமல் இருப்பவர்களை வைத்து ஈடுகட்ட எப்படி தரம் உயரும் .

தனியாரகத்தில் துவக்க பள்ளியில் 5 வகுப்புகளுக்கு குறைந்த பட்சம் 7 ஆசிரியர்கள் உள்ளனர். அது இல்லாமல் கூடுதல் திறன் வகுப்புகளுக்கு தனி ஆசிரியர்கள் .

இங்கோ ஓராசியர் பள்ளிகள் கூட உள்ளன.
5 வகுப்புகளுக்கு 25 பாடத்திற்கு - 2 ஆசிரியர் எப்படி தரம் உயரும் .

தனியார் பள்ளிகளில் 25% அதாவது ஏறத்தாழ 40 லட்சம் மாணவர்களில் 10 லட்சம் மாணவர்களுக்கு அரசு பங்களிப்பில் ஊக்குவிப்பு கல்வி வழங்கும் - எனில் அரசுப் பள்ளிகள் குறைப்பு யார் தவறு.

இந்த கோரிக்கைகள் மீடியா கூட மறைத்து சம்பளம் உயர்த்த போராடுவதாக போலி முகமூடி பூசுவது - ஜனநாயக திணிப்பு அரசியல் .

கல்வியை அரசு கையில் எடுக்கட்டும். முழுவதும் அரசு மையம் ஆகட்டும். தரத்தை கூட்டட்டும்.
அரசு பள்ளி மாணவர் திறன் கூட்டட்டும் . இதற்காக எல்லா முயற்சியிலும் பயிற்சியிலும் பங்கேற்க விருப்பமே.

தனியார் பள்ளிகளில் நடக்கும் உள்ளார்ந்த செயல்பாடுகளை கள ஆய்வு செய்து அதே முறையை அரசு பள்ளியில் தாரளமாக உள் செலுத்துங்கள். முழுவதும் அது போலவே உழைக்க தயார். ஆனால் எல்லோருக்கும் தெரியும் அங்கு நடக்கும் மன உலைச்சல்களும் அரசின் சட்ட விதி மீறல்களும்.

( அருகில் உள்ள தனியார் பள்ளியில் அரசு விடுமுறைகளிலும் சிறப்பு வகுப்புகள் உண்டு - எல்லோருக்கும் தெரியும் . கேட்க இயலாது. விடுமுறை மாணவர்களின் மனதினை உளைச்சலில் இருந்து விடுபட உருவாக்கபட்ட ஒன்று - அது எத்தனை தனியார் பள்ளிகளில் பின்பற்றபடுகிறது.)

அரசு பள்ளியில் பிள்ளை விளையாடி விழுந்து காயம் பட்டாலும் ஆசிரியரே பலி எனில் - அன்பை மீறிய பயம் மனதை வாட்டுகிறது.

அரசு பள்ளியில் எது செய்தாலும் தவறு. தனியார் பள்ளியில் எது நிகழ்ந்தாலும் வெளியில் தெரியாது.

எப்படி இந்த தராசு ஒன்றாகும். 
மனசாட்சிக்கு உட்பட்டு 24 மணி நேரமும் 365 நாட்களும் உழைக்க தயார்.

அதற்கு முன் இங்கு மண்டி கிடக்கும் நடைமுறை சிக்கல்களை களத்தில் இறங்கி தீர்வு காண வேண்டும்.

அரசு பாடகசாலைகள் மீட்டெடுக்க முயலாமல் - பள்ளிகள் இணைப்பு என்ற பெயரில் மறைக்க முயல்வது சமூகத்தை மூடராக்கும் செயல்.

முழுவதும் அரசுடமை ஆக்கபடும் ஆகப்பெரிய கல்வியக கனவுடன் ....