Image result for election commission of tamilnadu
சென்னை, ''ஓட்டுச் சாவடிகளில், வாக்காளர்களுக்கு தேவையான, அடிப்படை வசதிகளை செய்யும்படி, மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது,'' என, தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி, சத்யபிரதா சாகு தெரிவித்தார்.இது குறித்து, அவர் கூறியதாவது:அனைத்து ஓட்டுச் சாவடிகளிலும், மாற்றுத் திறனாளிகள் மற்றும் முதியோர் செல்ல வசதியாக, சாய்தளம் அமைக்க வேண்டும். கழிப்பறை, குடிநீர், மின்சார வசதி ஏற்படுத்த வேண்டும். தேவைப்பட்டால், சக்கர நாற்காலி ஏற்பாடு செய்ய வேண்டும் என, மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.லோக்சபா தேர்தலில், வாக்காளர்கள் ஓட்டளிக்கும் சின்னம் அச்சாவதை பார்க்கும் வசதி உடைய, நவீன ஓட்டுப்பதிவு இயந்திரம் பயன்படுத்தப்பட உள்ளது. இதன் செயல்பாடுகள், மக்களிடம் விளக்கப்பட்டு வருகிறது. வாய் பேச முடியாத, காது கேட்காத மாற்றுத்திறனாளிகள் அறிந்து கொள்ள, சைகையால் விளக்குவோரை வைத்து, செயல் விளக்கம் அளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.புதன் தோறும், மாலை, 4:00 மணி முதல், 6:00 மணி வரை, அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலர்களுடன், தேர்தல் பணிகள் குறித்து, ஆலோசிக்கப்பட உள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம், மறைமலைநகரில் உள்ள, மாநில ஊரக வளர்ச்சி நிறுவனத்தில், மாநில அளவிலான அலுவலர்களுக்கு, தேர்தல் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. அவர்கள், மாவட்ட அளவில், மற்ற அலுவலர்களுக்கு, தேர்தல் பயிற்சி அளிப்பர்.இவ்வாறு, சத்யபிரதா சாகு கூறினார்.நட்சத்திரங்களிடம், 'கால்ஷீட்' கேட்புலோக்சபா தேர்தலில், 100 சதவீதம் ஓட்டுப் பதிவை வலியுறுத்தி, வாக்காளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த, தேர்தல் கமிஷன், பல்வேறு குறும்படங்களை தயாரித்துள்ளது. மேலும், பிரபல சினிமா நட்சத்திரங்களை வைத்து, குறும்படங்கள் தயாரிக்க, தேர்தல் கமிஷன் திட்டமிட்டுள்ளது இதற்காக, நடிகர் - நடிகையரிடம், படப்பிடிப்புக்கான தேதி ஒதுக்கித் தரும்படி, தேர்தல் கமிஷன் கோரியுள்ளது.'மொபைல் ஆப்'கள் அறிமுகம்l தேர்தல் விதிமீறல் எங்கு நடந்தாலும், அதை, பொதுமக்கள் படம் பிடித்து, தேர்தல் கமிஷனுக்கு அனுப்ப, 'c-vigil' என்ற, மொபைல் ஆப் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதுl தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், அரசியல் கட்சியினர், பொதுக்கூட்டத்திற்கு அனுமதி பெறுவதற்காக, 'suvitha' மற்றும், பிரசாரத்திற்கு அனுமதி பெற, 'sugam' என்ற மொபைல் ஆப்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.