No photo description available.


யுரேனஸ் கண்டுபிடிக்கப்பட்ட நாள் - 1781
மார்ச் 2019

1781-ஆம் ஆண்டு இதே நாளில் யுரேனஸ் கோளை இங்கிலாந்தைச் சேர்ந்த வானியலாளர் வில்லியம் ஹர்ஸ்செல் என்பவர் கண்டறிந்தார். சூரியக் குடும்பத்தின் ஏழாவது கோளான யுரேனஸ், விட்டத்தின் அளவில் மூன்றாவது பெரிய கோளாகும். இதற்கு கிரேக்கக் கடவுள் யுரேனஸ் நினைவாகப் பெயரிடப்பட்டுள்ளது. மிகப்பெரிய வாயுக்கோளமான இதில் ஹைட்ரஜன், ஹீலியம், மீத்தேன் போன்ற வாயுக்கள் நிறைந்துள்ளன.

மிகவும் குளிர்ச்சியான கோளான இதன் வெப்பநிலை மைனஸ் 224 டிகிரி ஆகும். இக்கோள் சூரியனைச் சுற்றிவர 84 புவி ஆண்டுகளும், தன்னைத் தானே சுற்றி வர 17 மணி 14 நிமிடங்களும் ஆகும். இக்கோளைச் சுற்றிலும்11 பெரிய வளையங்கள் உள்ளன.