Image result for tnusrb
சென்னை:தமிழக காவல் துறை, சிறைத்துறை மற்றும் தீயணைப்பு துறைக்கு, புதிதாக, 8,826 பேர் தேர்வு செய்வதற்கான அறிவிப்பை, சீருடை பணியாளர் தேர்வு குழுமம் வெளியிட்டுள்ளது.

காவல் துறை, சிறைத்துறை மற்றும் தீயணைப்பு துறைக்கு, இரண்டாம் நிலை போலீஸ்காரர்கள் - எஸ்.ஐ.,க்கள், தமிழக சீருடை பணியாளர் தேர்வு குழுமம் வாயிலாக தேர்வு செய்யப்படுகின்றனர்.இந்த வகையில், காவல் துறையில், மாநகர மற்றும் மாவட்ட ஆயுதப்படை பிரிவுக்கு, இரண்டாம் நிலை போலீசாக, இளம் பெண்கள் மற்றும் திருநங்கையர், 2,465 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். 
தமிழக சிறப்பு காவல் படைக்கு, இரண்டாம் நிலை போலீசாக, 5,962 இளைஞர்கள்; சிறைத் துறைக்கு, 22 பெண்கள், 186 ஆண்கள் என, 208 பேர்; தீயணைப்பாளராக, 191 ஆண்களும் தேர்வு செய்யப்பட உள்ளனர்.இந்தாண்டு, மொத்தம், 8,826 பேரை தேர்வு செய்ய உள்ளதாக, தமிழக சீருடை பணியாளர் தேர்வு குழுமம் அறிவித்துஉள்ளது. 
அத்துடன், பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த முஸ்லிம்களுக்கான, 62 காலி பணியிடங்களும் நிரப்பப்பட உள்ளன.விண்ணப்பங்கள், 'ஆன்லைன்' வாயிலாக மட்டுமே பெறப்படும். விண்ணப்பத்தாரர்கள், மார்ச், 8, காலை, 10:00 மணி முதல், ஏப்., 8 வரை, www.tnusrbonline.org என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.