சென்னை:பள்ளி கல்வி துறையில் பணியாற்றும், முதன்மைக் கல்வி அதிகாரிகளான, சி.இ.ஓ.,க்கள், இரண்டு பேரை இடமாற்றம் செய்து, பள்ளி கல்வி முதன்மைச் செயலர், பிரதீப் யாதவ் உத்தரவிட்டார்.
கோவை, சி.இ.ஓ., அய்யணன், ராமநாதபுரம் மாவட்டத்துக்கும், அங்கு பணியாற்றிய, சி.இ.ஓ., முருகன், கோவை மாவட்டத்துக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.நிர்வாக பிரச்னையால், இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக, உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.