*💥💥இன்று மாலை 5 மணிக்கு மக்களவை தேர்தலுக்கான தேதியை தேர்தல் ஆணையம் அறிவிக்கிறது.*

*🔶🔶543 இடங்களைக் கொண்ட நாடாளுமன்ற மக்களவையின் ஆயுள்காலம் வரும் ஜூன் மாதம் 3-ந் தேதி முடிகிறது. அதற்குள் நாடாளுமன்ற மக்களவைக்கு தேர்தல் நடத்தி, முடிவுகள் அறிவித்து 17-வது நாடாளுமன்ற மக்களவை அமைக்கப்பட வேண்டும்.*

*🔶🔶இந்த நிலையில்,  இன்று  மாலை 5 மணிக்கு செய்தியாளர் சந்திப்பு நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.  இந்த செய்தியாளர் சந்திப்பின் போது மக்களவை தேர்தலுக்கான தேதியை தேர்தல் ஆணையம் அறிவிக்க உள்ளது.*

*🔶🔶அதேபோல், தமிழகத்தில் உள்ள 21 சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான தேதியும் இன்று அறிவிக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.*