+2 தேர்வு முடிவுகள் வெளியிடுதல் விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டல் விண்ணப்பித்தல் இயக்குநர் செய்திக்குறிப்பு:
பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் தொடர்பாக அரசு தேர்வுத்துறை அதிகாரப்பூர்வ அறிவிப்பை  வெளியிட்டுள்ளது. அதன்படி பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகளை தேர்வுத்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளங்களில் ( http://www.tnresults.nic.in , http://www.dge1.tn.nic.in , http://www.dge2.tn.nic.in ) ஏப்ரல் 19-ம் தேதி காலை 9.30 மணிக்கு பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.