புதுச்சேரி:தொடக்க கல்வி பட்டய தேர்வுக்கு தனித்தேர்வர்கள் இன்று 23ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம். இது குறித்து புதுச்சேரி மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவன முதல்வர் நடனசபாபதி விடுத்துள்ள செய்தி குறிப்பு:தொடக்க கல்வி பட்டய தேர்வுகள் (டி.டி.எட்) வரும் ஜூன் 14ம் தேதி துவங்கி 29ம் தேதிவரை நடைபெற உள்ளது. இத்தேர்வுகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதள வழி விண்ணப்பத்தையும் பக்கம் 1 முதல் 3 வரையுள்ள அறிவுரைகளையும் பதிவிறக்கம் செய்து கொண்டு தேர்வரின் தகுதி மற்றும் அறிவுரைகளையும் பின்பற்றி பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் ஏற்கனவே தேர்வெழுதி தேர்ச்சி பெற்ற மதிப்பெண் சான்றி தழ்களின் அனைத்து நகல்களையும் கண்டிப்பாக இணைத்து தேர்வர் வசிக்கும் மாவட்டத்திற்கு அருகில் அமைந்துள்ள மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் வாயிலாக சமர்ப்பிக்க வேண்டும்.மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களில் பொருத்தப்பட்டுள்ள வெப் கேமிரா வழியாக புகைப்படம் எடுக்கும் வசதி செய்யப்பட்டுள்ளதால் அந்நிறுவனங்களிலேயே புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்து கொண்ட பின்னர் அங்கேயே தேர்வு கட்டணம் செலுத்தலாம். தேர்வர் நேரில் அணுக வேண்டும். ஒவ்வொரு பாடத்திற்கு தேர்வு்கட்டணம்-50 ரூபாய், முதலாமாண்டு மதிப்பெண்சான்றிதழ்-100 ரூபாய், இரண்டாமாண்டு மதிப்பெண் சான்றிதழ், பதிவு மற்றும் சேவைக் கட்டணம்-15 ரூபாய், ஆன்-லைன் பதிவு கட்டணம் ஒரு விண்ணப்பத்திற்கு -50 ரூபாய் செலுத்த வேண்டும்.தேர்வு கட்டணம், விண்ணப்பங்களை இன்று 23 ம் தேதி முதல் 30 ம்தேதி வரை சமர்பிக்க வேண்டும். தகுதியற்ற தேர்வர்களின் விண்ணப்பங்கள் எந்தவித முன்னறிவிப்புமின்றி ரத்து செய்யப்படும். தபால் வழி பெறப்படும் விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும்.இவ்வாறு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.