சென்னை : பிளஸ் 2வுக்கு, ஜூனில் நடக்கவுள்ள துணை தேர்வுக்கான, 'ஹால் டிக்கெட்' இன்று வெளியிடப்படுகிறது.அரசு தேர்வுத்துறை சார்பில், மார்ச்சில் நடத்தப்பட்ட, பிளஸ் 2 பொது தேர்வுக்கு விண்ணப்பித்து, தேர்வு எழுத முடியாதவர்கள் மற்றும் தேர்வு எழுதி தேர்ச்சி பெறாதவர்களுக்கு, ஜூனில் சிறப்பு தேர்வு நடத்தப்படுகிறது.இந்த தேர்வு, வரும், 6ம் தேதி முதல் நடக்கிறது. இதற்கு தனியாக, விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

இந்த விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, தேர்வு எழுத தகுதியான மாணவர்களின் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, ஜூன் தேர்வை எழுதுவோருக்கான, ஹால் டிக்கெட், இன்று வெளியிடப்படுகிறது. மாணவர்கள் தங்களின் ஹால் டிக்கெட்டுகளை, www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில், இன்று பிற்பகல் முதல் பதிவிறக்கம் செய்யலாம் என, அரசு தேர்வுத் துறை அறிவித்துள்ளது.