சென்னை நேரு விளையாட்டரங்கில் அரசு ஊழியர்களுக்கான மாநில அளவிலான தேர்வுப் போட்டிகள் வருகிற சனிக்கிழமை (ஜன.23) நடைபெறுகிறது.

இதுகுறித்து மாவட்ட விளையாட்டு, இளைஞர் நலன் அலுவலர் அ.நாகராஜன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:


அகில இந்திய அளவில் அரசு ஊழியர்களுக்கு 2015-16ஆம் ஆண்டுக்கான ஆண்கள், பெண்கள் பங்கேற்கும் மேசைப் பந்து தேசியப் போட்டிகள் மத்திய பிரதேச மாநிலம் போபாலில் வருகிற பிப்ரவரி 8ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரையும், ஆண்களுக்கான கையுந்துப் பந்து போட்டிகள் பிப்ரவரி 3-ஆம் தேதி முதல் 6-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இதற்காக நடைபெறவுள்ள வீரர் வீராங்கனைகள் தேர்வுப் போட்டியில் சொந்த செலவில் கலந்து கொள்ள விரும்புவோர் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய முதுநிலை மேலாளர் வாழ்வீம ராஜாவை 74017 03446 என்ற செல்லிடப்பேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

மாநிலப் போட்டிகளில் தேர்வு பெறுவோர் தேசியப் போட்டியில் பங்கேற்கலாம். தேசியப் போட்டிகளுக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு தினப்படி, பயணப்படி வழங்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.