தேவையற்ற பணியிடம்: விபரம் அளிக்க உத்தரவு

அரசு துறைகளில் உள்ள, தேவையற்ற பணியிடங்கள் குறித்த விபரங்களை, வரும், 21ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்' என, துறை செயலர்கள் மற்றும் துறை தலைவர்களுக்கு, பணியாளர் சீரமைப்பு குழு உறுப்பினர் செயலர், கடிதம் எழுதி உள்ளார்.
ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகளை ஆய்வு செய்து, அவற்றை, தமிழக அரசு ஊழியர்களுக்கு அமல்படுத்துவது தொடர்பாக பரிந்துரைகள் வழங்க, தமிழக அரசு, குழு ஒன்றை நியமித்தது. ஊதிய உயர்வுஇந்த குழு பரிந்துரைப்படி, ஊதிய உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதேநேரத்தில், 'அரசு துறைகளில் தேவையற்ற பதவிகளை கண்டறிந்து, ஆட்குறைப்பு செய்து, செலவை கட்டுப்படுத்த வேண்டும்' என்றும், குழு தெரிவித்திருந்தது.அதையேற்று, ஓய்வு பெற்ற, ஐ.ஏ.எஸ்., அதிகாரி, ஆதிசேஷய்யா தலைமையில், பணியாளர் சீரமைப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. பரிந்துரைஇக்குழுவின் செயலராக, நிதி செலவினத்துறை செயலர், சித்திக் நியமிக்கப்பட்டுள்ளார்.இந்த குழு, அரசு துறைகளில், தேவையற்ற பணியிடங்களை கண்டறிவதுடன், எந்தெந்த பணிகளுக்கு, ஒப்பந்த அடிப்படையிலும், அயல் பணி அடிப்படையிலும் ஆட்களை நியமித்து, செலவை குறைக்கலாம் என, ஆறு மாதங்களுக்குள் அரசுக்கு பரிந்துரை செய்யும்.இந்நிலையில், குழுவின் உறுப்பினர் செயலர் சித்திக், அனைத்து துறை தலைவர்களுக்கும் கடிதம் அனுப்பியுள்ளார். அதில், 'அனைவரும் தங்கள் துறையின் நிர்வாக அமைப்பு, பணியிடங்கள், ஊழியர்கள் பெறும் சம்பளம், தேவையற்ற பணியிடங்கள் போன்ற விபரங்களை, வரும், 21க்குள் அனுப்பி வைக்க வேண்டும். 'இவ்விபரங்களை, src_2018@tn.gov.in என்ற, இ - மெயில் முகவரிக்கும் அனுப்பி வைக்கலாம்' என, தெரிவித்துஉள்ளார். 

No comments:

Post a Comment