பிளஸ் 2 விடைத்தாள் நகலை இன்று முதல் பதிவிறக்கம் செய்யலாம்: அரசு தேர்வுத்துறை அறிவிப்பு

பிளஸ் 2 விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்த மாணவர்கள் இன்று(சனிக்கிழமை) ஆன்லைனில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என அரசு தேர்வுத் துறை அறிவித்துள்ளது.


இதுதொடர்பாக அரசு தேர்வுகள் இயக்குநர் வசுந்தராதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதம் நடைபெற்ற பிளஸ் 2 தேர்வில் தேர்வெழுதிய விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்த மாணவர்கள் விடைத்தாள் நகலை ஜூன் 2-ம் தேதி (சனிக்கிழமை) பிற்பகல் 2 மணி முதல் scan.tndge.in என்ற இணையதளத்தில் தங்கள் பதிவெண் மற்றும் பிறந்த தேதியைக் குறிப்பிட்டு பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க விரும்பினால் இதே இணையதளத்தில் அதற்கான விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும்.

விண்ணப்பத்தை பூர்த்திசெய்து 2 நகல்கள் எடுத்து ஜூன் 4 முதல் 6-ம் தேதி வரை சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியிடம் ஒப்படைக்க வேண்டும். மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டுக்கான கட்டணத்தை முதன்மை கல்வி அதிகாரி அலுவலகத்தில் பணமாக செலுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்

No comments:

Post a Comment