இன்ஜி., தரவரிசை 5 நாளில் வெளியிட முடிவு

அண்ணா பல்கலையின் இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில் பங்கேற்க விண்ணப்பித்தோருக்கு, இன்னும் ஐந்து நாட்களில், தரவரிசை பட்டியல் வெளியிடப்பட உள்ளது.
அண்ணா பல்கலையின் இணைப்பு கல்லுாரிகளில், பி.இ., - பி.டெக்., - பி.ஆர்க்., படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், தமிழகஅரசின் சார்பில் நடத்தப்படுகிறது.இந்த ஆண்டு முதல், 'ஆன்லைன்' முறையில் கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. இதற்கான ஆன்லைன் வழி விண்ணப்ப பதிவு, மே முதல், ஜூன், 2 வரை நடந்தது.இதில், 1.60 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்; இவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு, ஜூன், 8ல் துவங்கி, 17ல் முடிந்தது.இந்நிலையில், மாணவர்களின் மதிப்பெண் விபரங்களை பதிவு செய்யும் பணி, இன்று துவங்க உள்ளது.மாணவர்களின் மதிப்பெண்ணை, அரசின் தேர்வுத் துறையில் இருந்து, அண்ணா பல்கலையின் கவுன்சிலிங் கமிட்டியினர் நேரடியாக பெற்றுள்ளனர்.மாணவர்களின் பதிவு எண் வாரியாக, இணையதளத்தில் மதிப்பெண்ணை பதிவு செய்கின்றனர்.இந்த பணிகள், இன்னும் மூன்று நாட்கள் வரைநடக்கும்.இதையடுத்து, மதிப்பெண் வாரியாக, தரவரிசை பட்டியல் தயாரிக்கப்படும். இந்த பணிகள் அனைத்தும், ஐந்து நாட்களில் முடிக்கப்பட்டு, வரும், 25ம் தேதிக்குள் தரவரிசை பட்டியல் வெளியாகும் என, அண்ணா பல்கலை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

தரவரிசை பட்டியல் வெளியிடப்படும்போது, இன்ஜினியரிங் கவுன்சிலிங் தேதியும் அறிவிக்கப்படும். 

No comments:

Post a Comment