அண்ணாமலை பல்கலை ஊழியர்களுக்கு, 'ஜாக்பாட்'

சென்னை: அண்ணாமலை பல்கலையின் ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கு, ஏழாவது ஊதிய குழு பரிந்துரைப்படி, ஊதியத்தை உயர்த்த, அரசு உத்தரவிட்டுள்ளது.
அண்ணாமலை பல்கலையில், உபரியாக பணியாற்றிய, 5,000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள், தமிழக அரசின் பல்வேறு துறைகளில் இயங்கும், கல்வி நிறுவனங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். அவர்களுக்கு, ஏழாவது ஊதிய கமிஷனின் பரிந்துரைப்படி, ஊதியத்தை உயர்த்துவது குறித்து, பல்கலையின் சிண்டிகேட் கூட்டத்தில், ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இதையடுத்து, பல்வேறு கல்வி நிறுவனங்களில் பணியாற்றும், அண்ணாமலை பல்கலையின், ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கு, ஊதியத்தை உயர்த்தி வழங்க, உயர் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment