திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் 2018, ஏப்ரல் பருவத்துக்குரிய தேர்வுகளில் ஏதேனும்
ஒரு பாடத்தில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு உடனடித் தேர்வு நடைபெறஉள்ளது.

இதுகுறித்து பல்கலைக்கழகத்தின் தேர்வு நெறியாளர் க. துரையரசன் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் 2018, ஏப்ரல் பருவத்துக்குரிய இளநிலை, முதுநிலைப்படிப்புகளுக்கான தேர்வு முடிவுகள் தொடர்ந்து வெளியிடப்படுகின்றன. செவ்வாய்க்கிழமை முதுநிலைக் கணிதப் பாடத்துக்கு முடிவுகள் வெளியான நிலையில், புதன்கிழமை இளநிலை அறிவியல் பிரிவில் அனைத்துப் பாடங்களுக்கும் வெளியிடப்பட்டுள்ளன. இளநிலைப் பாடப்பிரிவில் 2015-18 ஆம் கல்வியாண்டில் பயின்று முடித்து, ஏதேனும் ஒரு தாளில் மட்டும் தேர்ச்சி பெறாத மாணவர்கள் ஜூலை 7 -ல் நடைபெறும் அனைத்து இளநிலைப் பாடங்களுக்குரிய உடனடித் தேர்வில் பங்கேற்க விண்ணப்பிக்கலாம்.