கனவு ஆசிரியர் விருது பெற்ற ஆசிரியர்
பரிசாக கிடைத்த ரூ.10 ஆயிரத்தை பள்ளி கழிவறை மேம்படுத்த வழங்கினார். திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை புதுத்தெரு அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் பட்டதாரி ஆசிரியர் செல்வசிதம்பரம். இவரை பாராட்டி பல்வேறு விருதுகளும் வழங்கப்பட்டுள்ளது
இந்நிலையில்  பள்ளிக்கல்வி துறை சார்பில் வழங்கப்பட்ட கனவு ஆசிரியர் விருதுக்கு செல்வசிதம்பரம் தேர்வு செய்யப்பட்டு திருச்சியில் நடந்த விழாவில் விருதும் அதற்கான பரிசு தொகை ரூ.10ஆயிரமும் பெற்றார்
இந்நிலையில் நேற்று பள்ளியில் காமராஜர் பிறந்த தினவிழா நடைபெற்றது
இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட வட்டார கல்வி அலுவலர்கள் சொக்கலிங்கம் மற்றும் முருகபாஸ்கர் ஆகியோரிடம் கனவு ஆசிரியர் விருது பெற்ற செல்வசிதம்பரம் தான் கனவு ஆசிரியர் விருதுடன் பெற்ற பரிசுத்தொகையான 10ஆயிரம் பணத்தை தனது பள்ளியில் மாணவர்கள் பயன் படுத்தும் கழிப்பறையை மேலும் மேம்படுத்த நன்கொடையாக வழங்கினார். அனைவரும் பாராட்டினர்