சென்னை, பள்ளி மாணவர்களின், 'எமிஸ்' டிஜிட்டல் விபரங்களுக்கான பதிவை மேற்கொள்ள ஜூலை 31 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் மாணவர்களின் எண்ணிக்கையில், போலியை தடுக்கும் வகையில் எமிஸ் என்ற கல்வி மேலாண்மை டிஜிட்டல் திட்டம், அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதில் மாணவர்களின் பெயர், பெற்றோர், முகவரி, ரத்தப்பிரிவு, ஆதார் எண், அலைபேசி எண் உள்பட பல்வேறு விபரங்களை, எமிஸ் இணையத்தில் பதிவு செய்ய, உத்தரவிடப்பட்டுள்ளது.ஒவ்வொரு ஆண்டும், இந்த விபரங்களை, மாணவர்களின் வகுப்புக்கு ஏற்ப மேம்படுத்த வேண்டும். இதன்படி இந்த ஆண்டு ஜூலை 15க்குள் எமிஸ் விபரங்களை பதிவு செய்ய, ஆசிரியர்களுக்கு கெடு விதிக்கப்பட்டது.மாணவர் சேர்க்கை தொடரும் நிலையில், ஆசிரியர்களின் இடமாறுதல் கவுன்சிலிங், பதவி உயர்வு, புதிய பாடத்திட்ட பயிற்சி போன்ற கூடுதல் சுமைகள் உள்ளதால், எமிஸ் பதிவு பணிகளுக்கு, வரும் 31ம் தேதி வரை கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.