நீதிபதிகள் ஓய்வுபெறும் வயது உயர்கிறது

சுப்ரீம் கோர்ட் மற்றும் ஐகோர்ட்களில் நீதிபதிகள் பற்றாக்குறை காரணமாக ஏராளமான வழக்குகள் தீர்க்கப்படாமல் நிலுவையில் இருந்து வருகின்றன.
இதனை கருத்தில் கொண்டு நீதிபதிகள் ஓய்வுபெறும் வயதை உயர்த்தும்படி பார்லி நிலைக்குழு, மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பார்லி நிலைக் குழுவின் பரிந்துரையை ஏற்று நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்த மத்திய அரசும் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது 65 லிருந்து 67 ஆகவும், ஐகோர்ட் நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது 62 லிருந்து 64 ஆகவும் உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்துவதற்கு சட்டத்தில் வழிவகை செய்யும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டுப்பட உள்ளது. இது தொடர்பான சட்டதிருத்த மசோதாவை நடப்பு பார்லி கூட்டத்தொடரிலேயே தாக்கல் செய்து, நிறைவேற்றவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளாதாக கூறப்படுகிறது

No comments:

Post a Comment