உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு தேர்வு

அரசு சட்டக் கல்லூரிகளில் காலியாக உள்ள உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கையை ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) புதன்கிழமை வெளியிட உள்ளது. பத்திரிகைகள் மூலமும், www.trb.tn.nic.in என்ற வாரியத்தின் இணையதளத்திலும் இந்த அறிவிக்கை வெளியிடப்பட உள்ளது.

இதுகுறித்து டி.ஆர்.பி. வெளியிட்ட செய்திக்குறிப்பு:
அரசு சட்டக் கல்லூரிகளில் காலியாக உள்ள 186 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் போட்டி எழுத்துத் தேர்வு மூலம் நேரடி நியமன அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. இந்தத் தேர்வுக்கு ஜூலை 23 -ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 6 -ஆம் தேதி வரை டி.ஆர்.பி. இணையதளம் மூலம் ஆன்-லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கும் முறை, பாட வாரியான காலிப் பணியிடங்கள் எண்ணிக்கை, கல்வித் தகுதி உள்ளிட்ட விவரங்களை டி.ஆர்.பி. இணையதளத்தைப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

No comments:

Post a Comment