'நீட்' தேர்வு முடிவு: இன்று வெளியீடு

சென்னை:உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளுக்கான, 'நீட்' தேர்வு முடிவுகள், இன்று வெளியாகின்றன.நாடு முழுவதும், உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளான, டி.எம்., - எம்.சி.எச்., போன்றவற்றை படிக்க, அரசு மருத்துவக்கல்லுாரிகளில், 1,215 இடங்கள் உள்ளன. அதிகபட்சமாக, தமிழகத்தில், 192 இடங்கள் உள்ளன.
இந்நிலையில், 2018 - 19ம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு, நீட் தேர்வு, ஜூலை, 6ல் நடந்தது. சென்னை, கோவை, திருச்சி, மதுரை, சேலம், நெல்லை உட்பட, நாடு முழுவதும், 42 நகரங்களில் தேர்வு நடந்தது.தேர்வு முடிவுகள், www.nbe.edu.in என்ற இணையளத்தில், இன்று வெளியிடப்பட உள்ளன. இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான கவுன்சிலிங்கை, மத்திய சுகாதார சேவைகள் இயக்ககம் நடத்துகிறது.
கவுன்சிலிங் அட்டவணை உள்ளிட்ட விபரங்கள், www.mcc.nic.in என்ற, இணையதளத்தில் வெளியிடப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment