நடிகர் ராகவாலாரன்ஸ் நிதியுதவியால் சீரமைக்கப்பட்ட அரசு பள்ளி கட்டடத்தை, நடிகை ஓவியா திறந்து வைத்தார்.


விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனுார் அடுத்த செவலபுரை கிராமத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது.

 இப்பள்ளி கட்டடம், பழுதடைந்த நிலையில் இருந்தது. கிராம மக்கள், திரைப்பட நடிகர் ராகவா லாரன்சிடம், பள்ளி கட்டடத்தை சீரமைத்து தருமாறு வேண்டுகோள் விடுத்தனர்.

அதனையேற்று, 5 லட்சம் ரூபாய் செலவில் பள்ளி கட்டடத்தை நடிகர் ராகவாலாரன்ஸ் சீரமைத்தார். சீரமைக்கப்பட்ட பள்ளி கட்டடத்தை, நேற்று முன்தினம் மாலை, நடிகை ஓவியா திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முனுசாமி, செஞ்சி மாவட்ட கல்வி அலுவலர் ரோஸ்நிர்மலா உட்பட பலர் கலந்து கொண்டனர்