சிறப்பாசிரியர் சான்றிதழ்:

சிறப்பாசிரியர் பணி நியமனத்தில், சான்றிதழ்கள் சரிபார்க்கும் பொறுப்பை, முதன்மைக் கல்வி அதிகாரிகளான, சி.இ.ஓ.,க்களிடம் ஒப்படைக்க, டி.ஆர்.பி., முடிவு செய்துள்ளது.
அரசு பள்ளிகளில், 1,325 சிறப்பாசிரியர் பணியிடங்களை நிரப்ப, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., வழியாக, 2017ல், போட்டி தேர்வு நடத்தப்பட்டது. இதற்கான சான்றிதழ் சரிபார்ப்பு, மூன்று மாதங்களுக்கு முன் முடிந்து, சமீபத்தில், தேர்வு முடிவு வெளியானது. ஆனால், சான்றிதழ் சரிபார்ப்பின் போது, பல்வேறு தேர்வர்களின் கல்வி தகுதி ஏற்கப்படவில்லை என்ற, புகார் எழுந்தது. இதுதொடர்பாக, டி.ஆர்.பி., அலுவலகம் முன், தேர்வர்கள் போராட்டம் நடத்தினர். பலர், நீதிமன்ற நடவடிக்கையும் மேற்கொண்டுள்ளனர்.இந்நிலையில், தேர்வு செய்யப்பட்டவர்களின் சான்றிதழ்களை மீண்டும் சரிபார்க்க, டி.ஆர்.பி., முடிவு செய்துள்ளது. இதுகுறித்து, கலை ஆசிரியர் நல சங்க தலைவர் ராஜ்குமார், முதல்வரின் தனிப்பிரிவுக்கு அனுப்பிய கடிதத்திற்கு, இந்த தகவலை விளக்கமாக, டி.ஆர்.பி., தெரிவித்துள்ளது.இந்த மறுசான்றிதழ் சரிபார்ப்பை, டி.ஆர்.பி., மேற்கொள்ளாமல், மாவட்ட சி.இ.ஓ.,க்கள் வழியாக நடத்த, முடிவு செய்துள்ளது. எனவே, சான்றிதழில் குழப்பம் ஏற்பட்டு, நீதிமன்ற வழக்கு வந்தால், அதை, முதன்மைக் கல்வி அதிகாரிகள் கவனித்துக் கொள்ள அதிகாரம் வழங்கவும், டி.ஆர்.பி., அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

No comments:

Post a Comment