இன்று 10ம் வகுப்பு மறுகூட்டல்

சென்னை:அக்டோபரில் நடந்த, 10ம் வகுப்பு துணை தேர்வின் மறுகூட்டல் முடிவுகள், இன்று அறிவிக்கப்படுகின்றன.அரசு தேர்வு துறை இயக்குனர், வசுந்தராதேவி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பத்தாம் வகுப்புக்கு துணை தேர்வு, அக்டோபரில் நடந்தது. இதில், 24 ஆயிரத்து, 362 பேர் பங்கேற்றனர். அவர்களில், 203 பேர் மட்டும், மறுகூட்டலுக்கு விண்ணப்பித்தனர்.அவர்களின், 1,179 விடைத்தாள்கள் மறுகூட்டல் செய்யப்பட்டன. இதில், நான்கு பேருக்கு மட்டும் மதிப்பெண் மாறியுள்ளது.மதிப்பெண் மாறியவர்களின் பட்டியல், http://www.dge.tn.gov.in என்ற இணைய தளத்தில் இன்று வெளியாகும். அவர்கள் புதிய தற்காலிக மதிப்பெண்ணை, http://www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment