தமிழகத்தில் உள்ள ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் கீழ் ஒரு கோடியே 58 லட்சம் கோடி குடும்பங்களுக்கு காப்பீட்டு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இதுவரை 26 லட்சத்து 96 ஆயிரம் குடும்பங்கள் பயனடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை 2 லட்ச ரூபாயாக இருந்த காப்பீட்டு தொகை, தற்போது அதனை 5 லட்ச ரூபாயாக உயர்த்தப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இதன்படி, அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளில், நாளை முதல் 5 லட்ச ரூபாய் வரையிலான காப்பீட்டு தொகைக்கு கட்டணமில்லாமல் சிகிச்சை பெற முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.