இன்று (29.11.2018) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை: சற்றுமுன் அதிரடி உத்தரவு!
நாகை வருவாய் கோட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு இன்றும் 29.11.2018 விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

கஜா புயல் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. 

தற்போது அம்மாவட்டங்களில் ஓரளவுக்கு சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதாலும், மழை சில இடங்களில் பெய்து வருவதாலும் நாகை வருவாய் கோட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று  விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

இதனிடையே, இன்று  (வியாழக்கிழமை) முதல் முதல் டிசம்பர் 1 ஆம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுவையில் பலத்தை மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment