பிளஸ் 2 துணை தேர்வு மறுமதிப்பீடு, 'ரிசல்ட்

சென்னை, பிளஸ் 2 துணை தேர்வு மறுமதிப்பீடு முடிவுகள், இன்று வெளியாகின்றன. அரசு தேர்வு துறை இயக்குனர், வசுந்தராதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு:பிளஸ் 2, அக்டோபரில் நடந்த துணை தேர்வில், மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டின் முடிவுகள், scan.tndge.in என்ற இணையதளத்தில், இன்று பிற்பகல் வெளியிடப்படும். மதிப்பெண் மாறியவர்களின் பதிவு எண்கள் மட்டும் வெளியாகும். மதிப்பெண் மாற்றம் உள்ளோர், இன்று பிற்பகல் முதல், www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில், தற்காலிக சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யலாம். அசல் மதிப்பெண் சான்றிதழ், பின்னர் வழங்கப்படும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment