ஜவஹர்லால் நேருவின் பிறந்த நாளான நவம்பர் 14ம் தேதி பள்ளிக்குழந்தைகளின் போட்டோவுடன் கூடிய வாழ்த்து அட்டைகள் வழங்க பள்ளிக் கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது.
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு நவம்பர் 14ம் தேதி பிறந்தார். இந்த ஆண்டு குழந்தைகள் தினம் வித்தியாசமாக கொண்டாட அரசு திட்டமிட்டுள்ளது. குழந்தைகள் தினமான நவம்பர் 14ம் தேதி, அரசுப் பள்ளிகளில் படிக்கும்  குழந்தைகளுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி கொடுக்க புதிய திட்டம் ஒன்றை பள்ளிக் கல்வித்துறை செயல்படுத்த உள்ளது.இதன்படி தமிழகத்தில் உள்ள 5000 அரசுப் பள்ளிகளில் தொடக்க கல்வி படிக்கும்  குழந்தைகளுக்கு, நவம்பர் 14ம் தேதி குழந்தைகள் தின வாழ்த்து அட்டைகள் வழங்கப்பட உள்ளன. குறிப்பாக அந்த வாழ்த்து அட்டைகளில் அந்தந்த குழந்தைகளின் போட்டோக்களை இணைத்து சம்பந்தப்பட்ட குழந்தைகளுக்கே வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் வாழ்த்து அட்டைகளை அந்தந்த குழந்தைகளுக்கு வழங்குவார்கள். முதற்கட்டமாக 32 மாவட்டங்களில் 65 பள்ளிகளுக்கு இந்த வாழ்த்து அட்டைகளை பள்ளிக் கல்வித்துறை அனுப்பி வைத்துள்ளது. குழந்தைகளின் போட்டோக்களை இணைத்து நவம்பர் 14ம் தேதி ஆசிரியர்கள் வழங்குவார்கள்