கஜா புயலால் நாகை,திருவாரூர் ,புதுகை,தஞ்சாவூர் மக்கள் மிகவும் பாதிப்படைந்துள்ளனர்.....பெரும்பாலான கிராமங்களில் அரசியல் கட்சிகள்,தன்னார்வ தொண்டு நிறுவனங்கள்,அரசு ஊழியர்கள்,ஆசிரியர்கள் களப்பணியாற்றி வருகிறார்கள்..அது போல மதுரை காமராஜர் தொலைநிலைக் கல்வி இயக்கத்தில் B.Ed  முதலாம் ஆண்டு பயிலும் 19 A Batch மாணவ ஆசிரியர்கள் 57 பேர் தங்களுடன் பயிலும் மாணவ ஆசிரியை திருமதி செல்வியிடம் அவரது ஊரில் ஏற்பட்ட  கஜா புயல் பாதிப்பை கேட்டு மனவேதனை அடைந்தனர்..உடனே மாணவ ஆசிரியர்கள் அனைவரும் சேர்ந்து கஜா புயலால்  பாதிக்கப்பட்ட நாகபட்டினம் மாவட்டம் காமேஸ்வரம் கடற்கரை பகுதியில் வாழும் மக்களுக்கு தானாக முன்வந்து ரூ.15,000 மதிப்பிலான போர்வைகள்,துண்டுகள் மற்றும் நைலான் பாய்கள் ஆகியவற்றை மாணவ ஆசிரியர்கள் திருப்பூண்டியைச் சேர்ந்த திருமதி செல்வியிடம் வழங்கி அவ்வூர் கிராம மக்களுக்கு வழங்கிட கேட்டுக் கொண்டனர்..