பாலிடெக்னிக் கல்லுாரிகளில், புயல் காரணமாக, தள்ளி வைக்கப்பட்ட தேர்வுகள், வரும், 29ம் தேதி துவங்குகின்றன.
தமிழகத்தில், 'கஜா' புயல் தாக்கம் காரணமாக, டெல்டா மாவட்டங்களில், கடும் சேதம் ஏற்பட்டு, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி, பாலிடெக்னிக் கல்லுாரிகளின் தேர்வுகளை, வேறு தேதிக்கு தள்ளி வைத்து, தமிழக தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டது. தற்போது, புதிய தேதியை, தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் அறிவித்துள்ளது. இதன்படி, நவ., 15ல் ரத்தான தேர்வு, வரும், 29லும்; 16ம் தேதி தேர்வு, வரும், 27லும்; 17ம் தேதி தேர்வு, வரும், 30ம் தேதியும் நடக்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.