தேசிய திறனாய்வு தேர்வுக்கான, தற்காலிக விடை குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு, மத்திய அரசின் உதவி தொகை வழங்க, தேசிய திறனாய்வு தேர்வு நடத்தப்படுகிறது. முதல் கட்டமாக, மாநில அளவிலான தேர்வு, நவம்பர், 4ல் நடத்தப்பட்டது. இந்த தேர்வுக்கான விடை குறிப்பை, அரசு தேர்வு துறை நேற்று வெளியிட்டது. மாணவர்கள், www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில், விடை குறிப்பை பார்த்து கொள்ளலாம். விடை குறிப்பு குறித்து, மாற்று கருத்துகள் இருந்தால், வரும், 26க்குள், directordge.tn@nic.in என்ற, இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என, தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.