சேலத்தில் நடக்கும் முதலாவது புத்தக திருவிழாவில், கலந்து கொள்ள விரும்பும் மாணவர்களின் விபரங்களை அனுப்பி வைக்க, பள்ளி தலைமையாசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

சேலம் போஸ் மைதானத்தில், நவ., 9 முதல், 21 வரை, முதலாவது புத்தக திருவிழா நடைபெற உள்ளது. தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள், மாவட்ட நிர்வாகம் இணைந்து நடத்தும் கண்காட்சியில், பள்ளி மாணவ, மாணவியர் பங்கேற்க ஊக்கப்படுத்துமாறு, ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது. இதில், கலந்து கொள்ள விரும்பும் மாணவர்களை, பள்ளி ஆசிரியர்கள் பொறுப்பில் அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு பள்ளியிலிருந்தும், எட்டாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்களில், எத்தனை பேர் புத்தக திருவிழாவில் பங்கேற்க விரும்புகின்றனர்; அவர்களை அழைத்து வரப்போகும் பொறுப்பாசிரியர்களின் பெயர் உள்ளிட்ட விபரங்களை, அனுப்பி வைக்க பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேஷ்மூர்த்தி உத்தரவிடப்பட்டுள்ளார்