முதன்மை கல்வி அதிகாரிகள் மாற்றம்

சென்னை: தஞ்சாவூர் முதன்மை கல்வி அலுவலர், சுபாஷினி, மதுரை முதன்மை கல்வி அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி, மாவட்ட கல்வி அலுவலர், முருகேசன், பதவி உயர்வு பெற்று, துாத்துக்குடி முதன்மை கல்வி அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.திருநெல்வேலி மாவட்டம், சேரன்மாதேவி, மாவட்ட கல்வி அலுவலர், ஜெயராஜ், பதவி உயர்வுடன், தமிழ்நாடு பாடநுால் கழக துணை இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம், மாவட்ட கல்வி அலுவலர், சாந்தா, பதவி உயர்வு பெற்று, தஞ்சாவூர் முதன்மை கல்வி அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.இதற்கான உத்தரவை, பள்ளிக்கல்வித் துறை முதன்மை செயலர், பிரதீப் யாதவ் பிறப்பித்துள்ளார்

No comments:

Post a Comment