தமிழக அரசின் பெண் குழந்தைகளுக்கான விருதுக்கு நவம்பர் 15-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஒவ்வொரு ஆண்டும் தேசிய பெண் குழந்தை தினமான ஜனவரி 24-இல் மாநில அரசின் பெண் குழந்தைகளுக்கான விருது வழங்கப்படுகிறது. இந்த விருது பெற தகுதியான பெண் குழந்தைகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த விருதுக்கு விண்ணப்பிக்கும் பெண் குழந்தைகள் 5 வயதுக்கு மேல் 18 வயதுக்கு உள்பட்டவராகவும், தமிழ்நாட்டில் வசிப்பவராகவும் இருக்க வேண்டும்.
அத்துடன் பெண் கல்வி, பெண் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு , பெண் குழந்தை திருமணங்களைத் தடுத்தல் மற்றும் சமூக அவலங்கள் அதனை தீர்வு காண்பதற்கு புத்தகங்கள் மற்றும் கையேடுகள் எழுதி வெளியிட்டிருத்தல், வீர தீர செயல் புரிந்திருக்க வேண்டும்.