1) தங்கள் பள்ளி வாளாகத்தில் நீர் தேங்காமல் டெங்கு கொசு வளராமல்
பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யவும்.
2) காலை வழிபாட்டு கூட்டத்தில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் பற்றி விளக்கி கூறவும்
3) தினமும் டெங்கு ஒழிப்பு / பிளாஸ்டிக் ஒழிப்பு உறுதிமொழி கூறவும்
4) பள்ளி மாணவர்களிடம் கைகழுவுதலின் அவசியம் அதனால் நோய் பரவாமல் தடுக்கலாம் என வலியுறுத்திக் கூறவும்.
5) ஏடிஸ் கொசு லார்வாக்களை பள்ளி வளாகம், மாணவர்களின் இல்லங்கள் மாணவர்களின் அண்டை வீடு மற்றும் தெருக்களில் கண்டறித்து அழிக்க ஊக்கப்படுத்துங்கள்...
6) தங்கள் பள்ளிகளில் செயல்படும் NSS SCOUT NCC JRC பசுமை படை குழுக்களை கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தலாம்.
7) கிராமத்தில் உள்ள சுகாதார பணியாளர்கள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலகப் பணியாளர்கள் தங்கள் உதவியை நாடும்போது முழுமையாக ஒத்துழைப்பு தந்து தாங்களும் இணைந்து சுகாதார பணிகளை  மேற்கொள்ள வேண்டுகிறோம்.
8. நவம்பர் 1 முதல் தொடர்ந்து கொசுக்களை ஒழிக்க  / தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள மேற்கொள்ள வேண்டும்.
9) மாணவர்களிடம் காய்ச்சல் இருமல்  தொடர் தலைவலி இருத்தால் மருத்துவரை உடனடியாக அணுக ஆலோசனை கூறவும்..
10) சுகாதாரமான நலவாழ்வு மாணவர்களுக்கும் கிராமத்தினருக்கும் அமைய பூரண ஒத்துழைப்பு நல்கிட வேண்டுகிறோம்..

மாவட்ட ஆட்சியர் ஆணைப்படி
CEO, DEOS, BEOS. MADURAI DISTRICT.