தொடர் மழை காரணமாக சென்னைப் பல்கலைக்கழகம், சட்டப் பல்கலைக்கழகங்கள் சார்பில் வியாழக்கிழமை (நவ. 22) நடத்தப்பட இருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

வியாழக்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால், சென்னைப் பல்கலைக்கழகம் மற்றும் தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகங்கள் சார்பில் இணைப்பு கல்லூரிகளுக்கு வியாழக்கிழமை நடத்தப்பட இருந்த தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இந்தத் தேர்வுகளுக்கான மாற்று தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும்.
அண்ணா பல்கலை. தேர்வுகள் நடைபெறும்: அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் நடத்தப்படும் தேர்வுகள் ஒத்திவைக்கப்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது