இன்று ஆசிரியர்களின் ஒத்துழைப்பு நன்றாக உள்ளது. பெற்றோரின் ஒத்துழைப்பு இருந்தால், குழந்தைகள் எதிர்காலத்தில் நன்றாக வரமுடியும்,'' என, அமைச்சர் கருப்பணன் பேசினார்.

ஈரோடு மாவட்டம், கோபி அருகே கூகலூர் பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப்பள்ளியில், நன்கொடையாளர்களுக்கு பாராட்டு விழா நடந்தது. ஈரோடு கலெக்டர் கதிரவன் தலைமை வகித்தார். சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பணன் பேசியதாவது: அரசு பள்ளிகளில், ஒரே ஒரு குறை உள்ளது. பெற்றோரின் ஒத்துழைப்பு இருக்க வேண்டும். இன்று ஆசிரியர்களின் ஒத்துழைப்பு நன்றாக உள்ளது. பெற்றோரின் ஒத்துழைப்பு இருந்தால், குழந்தைகள் எதிர்காலத்தில் நன்றாக வரமுடியும். குழந்தைகள் என்ன தப்பு செய்தாலும், பெற்றோர் சரி என ஏற்றுக்கொள்கின்றனர். இதுதான் அவர்கள் செய்யும் முதல் தவறாக உள்ளது. பெற்றோர் குழந்தைகளுக்கு செல்லம் கொடுக்கின்றனர். தங்கள் குழந்தைகள் நன்றாக படிக்க வேண்டும், என்ன நடவடிக்கை வேண்டுமானலும் எடுங்கள் என மாதம் ஒரு முறை ஆசிரியரை, பெற்றோர் சந்தித்து முறையிட வேண்டும். அப்படி செய்தால், ஆசிரியர்கள், குழந்தைகளை நன்றாக பயில செய்வர். வேண்டும் என்றே ஆசிரியர்கள் எவரும் குழந்தைகளை கண்டிப்பதில்லை.பெற்றோர் ஒத்துழைப்பு குறைவதால் தான், குழந்தைகளின் படிப்பு குறைகிறது. இவ்வாறு அவர் பேசினார். பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.