ஸ்மார்ட் போனில் தேர்வு எழுதிய மாணவர்கள்

 ஸ்மார்ட் போனில் தேர்வு எழுதிய மாணவர்கள்
 ஸ்மார்ட் போனில் தேர்வு எழுதிய மாணவர்கள்

பெரம்பலுார், :பெரம்பலுார் மாவட்டத்தில், அரசு பள்ளியில் முதல் முறையாக, ஸ்மார்ட் போனில் மாணவ - மாணவியர் தேர்வு எழுதினர்.பெரம்பலுார் மாவட்டம், க.எறையூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், மத்திய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையமும், விஞ்ஞான் பிரசார் நிறுவனமும் இணைந்து, தேசிய அளவிலான இணைய வழி திறனறிதல் தேர்வு நடத்தியது.பள்ளியில், ஆறு, ஏழு மற்றும் எட்டாம் வகுப்பு பயிலும் மாணவ - மாணவி யர், 33 பேர் ஸ்மார்ட் போன், லேப்டாப் ஆகியவற்றை பயன்படுத்தி தேர்வு எழுதினர். பெரம்பலுார் மாவட்டத்திலேயே, முதல் முறையாக, அரசு பள்ளியில் இணைய வழி திறனறிதல் தேர்வு நடந்தது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment