நீட் தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க தேவையான ஏற்பாட்டை செய்துக்கொடுக்க வேண்டும் என்று மாவட்ட முதன்மை அதிகாரிகளுக்கு பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது


அடுத்த ஆண்டுக்கான எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு வரும் மே 5-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக வரும் 30-ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டும்.


இந்தநிலையில் ஒவ்வொரு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியும் தங்கள் மாவட்டத்தில் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்களை கண்டறிந்து ஆன்லைனில் விண்ணப்பிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.அதேபோல் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சிறப்பு கவனம் செலுத்தி மாணவ மாணவிகள் விண்ணப்பிக்க தேவையான ஏற்பாட்டை செய்துக்கொடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.