சென்னை : தமிழகத்தில், 'லோக் ஆயுக்தா' எனப்படும், மக்கள் நீதிமன்றம் அமைப்பதற் கான ஆயத்த பணிகளை, அரசு துவக்கி உள்ளது. இதற்கான விதிமுறைகள் மற்றும், 26 பணியிடங்களை உருவாக்கி, அரசாணை வெளியிட்டு உள்ளது.


லோக் ஆயுக்தா,பணிகள்,துவக்கம்,தமிழக அரசு,புதிய அரசாணை ,வெளியீடு


பொது ஊழியர்களுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்க, தமிழகத்தில், லோக் ஆயுக்தா அமைப்பை நிறுவ, ஜூலை யில் நடந்த சட்டசபை கூட்டத் தொடரில், சட்டம் நிறைவேற்றப்பட்டது. 

இச்சட்டப்படி, ஊழல் தடுப்பு சட்டம் - 1988ன் கீழ், தவறு செய்த மக்கள் பிரதிநிதிகள்,

உயர் அதிகாரிகள் மீது புகார் அளிக்கலாம். இந்த புகார்களை, லோக்- ஆயுக்தா விசாரிக்கும்.லோக் ஆயுக்தா தலைவர் மற்றும் உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான குழுவின் தலைவராக, முதல்வர் இருப்பார். 

சபாநாயகரும், எதிர்க்கட்சிதலைவரும் உறுப்பினர் களாக இருப்பர்.இந்த குழுவிற்கான பெயர்களை பரிந்துரைக்க, தேடுதல் குழுவும் அமைக்கப்படும். இந்தக் குழு, பெயர்களை தேர்வு செய்து, தேர்வுக் குழுவிற்கு தெரிவிக்கும்.

உயர் நீதிமன்ற நீதிபதி அல்லது முன்னாள் நீதிபதி அல்லது ஊழல் தடுப்புக் கொள்கை, பொது நிர்வாகம், விழிப்புணர்வு, நிதி மற்றும் சட்டத்துறையில், 25 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர், லோக் ஆயுக்தா தலைவராக இருக்க வேண்டும்.அமைப்பின் உறுப்பினர்களாக, நான்கு பேர் இருப்பர். 

அவர்களில் இருவர், நீதித்துறையைச் சேர்ந்தவர் களாக இருக்க வேண்டும்.

இந்த சட்ட விதிமுறை களின்படி, லோக் ஆயுக்தா அமைக்க, ஆயத்த பணி களை, அரசு துவக்கி உள்ளது.முதல் கட்டமாக, லோக் ஆயுக்தா செயலர், இயக்குனர், சார்பு செயலர், பதிவாளர், சார் - பதிவாளர், ஆய்வாளர், உதவி ஆய்வாளர் என, 26 பணியிடங் களை உறுதி செய்து, அரசாணையை வெளியிட்டு உள்ளது.

லோக் ஆயுக்தா அமைப்பின் தலைவர், இந்த, 26 பணியிடங்களுக்கான தகுதி வாய்ந்த நபர்களை யும் தேர்வு செய்வார். லோக் ஆயுக்தா சட்ட விதிமுறைகள், மாநில அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளன.