பல்கலைக்கழகங்களில் போலி சான்றுகள் மூலம் பேராசிரியர் பணியில் சேர்ந்தவர்கள் நீக்கப்படுவார்கள் என சேலத்தில் உயர் கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்தார்.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் ஆய்வு பணியில் ஈடுபட்டனர். அவர்களுடன் சென்றுவிட்டு விமானம் மூலம் நேற்று சேலம் திரும்பிய உயர் கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் அளித்த பேட்டி: புயல் பாதித்துள்ள பகுதிகளை சேர்ந்த அரசு கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் கட்டணத்தை ஏற்கனவே செலுத்திவிட்டனர். அதே வேளையில் தனியார் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களின் கல்வி கட்டணங்களை குறைப்பது தொடர்பாக சம்பந்தப்பட்ட தனியார் கல்லூரி நிறுவனங்களுடன் பேசி நடவடிக்கை எடுக்கப்படும்