ஆனைமலை பொள்ளாச்சி அடுத்த ஆழியாறு சின்னாறு சேர்ந்த அரசு பள்ளி மாணவன் திருவனந்தபுரம் தும்பா இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் சுற்றுப்பயணம் செல்ல தேர்வாகியுள்ளார். நாளை 21ஆம் தேதி சுற்றுப்பயணம் செல்கிறார்.

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 4 முதல் பத்தாம் தேதி வரை சர்வதேச அளவில் விண்வெளி வாரம் அனுசரிக்கப்படுகிறது. 'ஓப்பன் ஸ்பேஸ் பவுண்டேசன் - ஓ.எஸ்.எப்.,' என்ற தனியார் அமைப்பு சார்பில், 'விண்வெளி திறனறிதல்' தலைப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு, அக்., 9ம் தேதி 'ஆன்லைன்' வினாடி - வினா போட்டி நடத்தப்பட்டது. அந்த போட்டியில் கலந்து கொண்ட மாணவர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தியுள்ளனர்.

'சூரிய குடும்பம் என்றால் என்ன, நிலாவில் எப்படி வீடு கட்டுவீர்கள், பூமியின் வடிவம் என்ன' என்பன உள்ளிட்ட ஐந்து கேள்விகள் இடம்பெற்றிருந்தது. கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சின்னாறு பகுதியைச் சேர்ந்த அரசு பள்ளியில் இருந்து 10 மாணவர்கள் தேர்வு எழுத உள்ளனர்.

ஐந்தாம் வகுப்பு பயிலும் ஆழியாறு கிராமத்தைச் சேர்ந்த பாத்திர வியாபாரி ராஜேந்திரன் மகன் திவாகர் தேர்வாகியுள்ளார். கிராமப் பள்ளியில் படித்து விண்வெளி ஆராய்ச்சி மையத்தை பார்வையிட தேர்வாகியுள்ள மாணவன பள்ளி தலைமையாசிரியர் பாராட்டியுள்ளார். இந்த சுற்றுப்பயணத்தின் போது விக்ரம் சாராபாய் விண்வெளி நிலையத்தில் செயல்பாடு மற்றும் விண்வெளிக்க கொண்டு செல்லப்படும் ராக்கெட் உள்ளிட்ட பொருட்களை அடங்கிய அருங்காட்சியகத்தை பார்வையிட செல்கிறார் என்றார்.

மாணவன் திவாகர் கூறுகையில் விண்வெளி என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும் புத்தகத்தில் உள்ளதையும் ஆசிரியர் கற்றுக்கொடுப்பதும் வைத்து விண்வெளி கோல்களை கொடுத்தது கற்றுக்கொண்டேன். விண்வெளிக்குச் செல்ல வேண்டும் நிலாவை தொட வேண்டும் என்பது எனக்கு வாழ்நாள் ஆசை என கூறியுள்ளார் மறைந்த ஜனாதிபதி ஏபிஜே.அப்துல் கலாம் சொன்னதைப் போன்று, கனவு காணும் மாணவனுக்கு வாழ்த்துக்கள்