சென்னை, ஐந்து தேர்வுகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நீட்டித்துள்ளது.
இது குறித்து, டி.என்.பி.எஸ்.சி.,யின் செயலர் நந்தகுமார் வெளியிட்ட செய்திக்குறிப்பு:கூட்டுறவு சங்கங்களின் இளநிலை ஆய்வாளர்; தோட்டக்கலை உதவி இயக்குனர் மற்றும் தோட்டக்கலை அலுவலர்; நகர்ப்புற வளர்ச்சி துறையான, டி.டி.சி.பி.,யின் மூன்றாம் நிலை வரைவாளர்; இந்து அறநிலையத்துறை செயல் அலுவலர், 3 மற்றும், 4 ஆகிய பதவிகளுக்கு, தனித்தனியாக தேர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.இந்த தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க, தனியாக அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த ஐந்து தேர்வுகளுக்கும் விண்ணப்பிப்பதற்கான அவகாசம், டிச., 10 வரையும், கட்டணம் செலுத்தும் அவகாசம், டிச., 12 வரையும் நீட்டிக்கப்பட்டுள்ளது. தேர்வுக்கான தேதிகளில், எந்த மாற்றமும் இல்லை.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.