சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஒன்றியம்
மிளகனூர் கிராமத்தில் இயங்கும் அரசு உயர்நிலைப்பள்ளியில் தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கல்விப்பணி

மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் சுற்றறிக்கை விடும் நோட்டிற்கு குட்பை சொல்லிவிட்டு, ஆப் மூலமாக பல அறிய தகவல்களை இப்பள்ளி வழங்கிவருகிறது.
* நமது பள்ளி செயலியை உருவாக்கியதில் பெருமிதம் கொள்கிறோம்
* இது முற்றிலும் மாணவர்கள் மற்றும் பெற்றோரின் நலனுக்காக
உருவாக்கப்பட்டுள்ளது.
* இந்தச் செயலி மூலமாக மாணவர்களின் வளர்ச்சியும்,பள்ளியின் வளர்ச்சி நிலையயும் எளிதில் அரசின் கவனத்தையும் நமது பள்ளியைச் சுற்றியுள்ள தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கவனத்தையும் ஈர்த்து நமது பள்ளியை ஒரு முன்மாதிரிப் பள்ளியாக உருவாக்குவதே இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளதன் நோக்கமாகும்.

வாருங்கள், இந்தச் செயலியில் உள்ள சிறப்பம்சங்கள் பற்றி உங்களுக்கு
விளக்குகிறேன்.

* முகப்பு பக்கத்தில் தலைமையாசிரியர் பெயரும் பள்ளியின் பெயரும்
தொலைபேசி எண்ணுடன் இடம் பெற்றிருக்கும்.
தொலைக்காட்சியில் ஓடும் Scrolling போல அறிவிப்பு செய்திகள் என்ற பகுதி உள்ளது.
* அடுத்து இரண்டாவது  முகப்பு பக்கத்தில் ஆறு விதமான தலைப்புகளில் கட்டங்கள் அடங்கிய பகுதி காணப்படும். அந்தப் பகுதி குறித்து கீழ் காண்போம்.
* இந்த ஆறு கட்டங்களுக்கு மேல் பகுதியில் பள்ளியின் நிகழ்ச்சி நிரல்கள் தொடர் செய்தியாக நகர்ந்து செல்லும். அதில் ஏதாவது ஒன்றை தட்டினால் அது குறித்த முழு செய்தி குறித்த விபரத்தைத் தெரிந்து கொள்ளலாம்.

1. ஆளுமை பகுதி (Admin)
ஆளுமைப் பகுதி என்பது நமது பள்ளி செயலி முழுவதும் தலைமையாசிரியர் கட்டுப்பாட்டில் இருக்கும். இதில் பதிவேற்றம் செய்யப்படும் நிகழ்ச்சி குறித்த செய்திகள், புகைப்படங்கள், பள்ளியில் பயிலும் மாணவர்கள் குறித்த அனைத்து விபரங்களும் தலைமையாசிரியர் அனுமதியின்றி யாரும் செயல்படா வண்ணம் கட்டுப்படுத்தப்பட்டிருக்கும் தலைமையாசிரியர் கவனத்தின் மூலமாக.


2. பெற்றோர் பகுதி (Parents)
* இதில் மாணவர்களின் பெற்றோர் குறித்த விபரங்கள் அடங்கியிருக்கும்.
* மாணவர்கள் பள்ளிக்கு வருகை புரிந்த நாட்கள் மற்றும் அவர்கள் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் குறித்த விபரங்கள் அனைத்தும் பள்ளி தலைமையாசிரியர் மூலம் பெற்றோருக்கு தெரியப்படுத்தப்படும்.
* பெற்றோர் ஆசிரியர் சந்திப்புகள் குறித்த அறிவிப்புகள் தேதிகள் இதன் வாயிலாக அனுப்பப்படும்.

3. மாணவர்கள் பகுதி (Student)
* மாணவர்கள் பகுதியில் ஒவ்வொரு மாணவரின் தனிப்பட்ட விபரங்கள் அடங்கியிருக்கும்.
* ஒவ்வொரு மாணவருக்கும் ஒரு உள்நுழை குறியீடும் மற்றும் இரகசிய சொல்லும் தரப்படும். இவற்றைப் பயன்படுத்தி மாணவர்கள் உள்நுழைந்து தங்கள் விபரங்களைத் தெரிந்து கொள்ள முடியும்.
* ஒவ்வொரு மாணவரும் பள்ளிக்கு வருகைபுரிந்த நாட்களானது இந்தப் பகுதியில் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கும்.

i. மாணவர்களின் குறைகள் பகுதி
* இதன் வாயிலாக மாணவர்கள் தங்கள் குறைகளை தலைமையாசிரியருக்குத் தெரியப்படுத்த முடியும்.   
* ஒவ்வொரு மாணவரும் தங்கள் பள்ளியின் நிலை குறித்தும் தனது வகுப்பு ஆசிரியர் குறித்த நிறைகள் மற்றும் குறைகளை நேரடியாக பள்ளி நிர்வாகத்திற்கு தெரியப்படுத்திக் கொள்ளலாம்.
* மாணவர்களின் பெற்றோருக்கும் தங்கள் பள்ளி குறித்தும், பள்ளி ஆசிரியர்கள் குறித்தும் தங்கள் நிறை, குறைகளை தெரிவிக்க உதவியாக இருக்கும்.
* மாணவர்கள் தங்கள் பள்ளிக்கு வரமுடியாத பட்சத்தில் ஆப் மூலமாகவே விடுப்பு எடுத்துக் கொள்ள அனுமதி வேண்டுதல் பகுதியும் (Leave Request) உள்ளது.
* மாணவர்கள் மற்றும் பெற்றோர் அளித்த புகார்கள் குறித்து பள்ளி தலைமையாசிரியர் உண்மை நிலையை அறிந்து எளிதில் அதற்கான தீர்வு எடுக்க இந்தப்பகுதி பயனுள்ளதாக அமையும்.

4. நமது பள்ளி (namathu palli) :
நமது பள்ளி என்ற பகுதியில் நமது பள்ளியினுடைய சிறப்புகள் மற்றும் நமது பள்ளி அமைந்திருக்கும் இடம், சுற்றுச்சூழல் பற்றிய விபரங்கள் இடம்பெற்றுள்ளன.


5. Gallery :
இப்பகுதியை இரண்டு பகுதிகளாகப் பிரித்துள்ளோம். இதில் Photo gallery, Video gallery என இரண்டு பகுதிகள் உள்ளன. Photo gallery இல் நமது பள்ளியின் புகைப்படம் மற்றும்  நம் பள்ளி மாணவ, மாணவிகள் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட போது எடுக்கப்பட்ட புகைப்படம், பரிசுகள் வழங்கும் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளன. Video Gallery இல் நமது பள்ளியின் video காட்சிகள் மற்றும்  நம் பள்ளி மாணவ, மாணவிகள் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட போது எடுக்கப்பட்ட video காட்சிகள், மாணவ மாணவிகள் சுற்றுலா சென்ற போது எடுக்கப்பட்ட video காட்சிகள் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

6. நிகழ்வுகள் பகுதி (Events)
* நிகழ்வுகள் பகுதியில் பள்ளியில் நடந்த முக்கிய நிகழ்ச்சிகள் குறித்த செய்தி இடம் பெற்றிருக்கும்.
* இதன் மூலம் மாணவர்களின் திறன் வெளிப்படுத்தப்படும்.
* மாணவர்கள் செய்த சமூகப்பணி (தங்கள் இருக்கும் பகுதி மற்றும் பள்ளிகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்றவை) இடம் பெறும்.

7. தேர்வு முடிவுகள் பகுதி (Result)
* தேர்வு முடிவுகள் பகுதியில் மாணவர்களின் தேர்வு முடிவுகள் குறித்த செய்திகள் பதிவேற்றம் செய்யப்படும்.
* ஒவ்வொரு வகுப்பு மாணவர்களின் பருவத்தேர்வு முதல் சிறப்புத் தேர்வுகளின் மதிப்பெண்கள் அவர்களுக்கு இதன் வாயிலாக தெரியப்படுத்தப்படும்.
* உடல்நிலை சரியில்லாத நேரத்தில் பள்ளிக்கு வர இயலாத மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை வீட்டிலிருந்தே அறிந்து கெள்ள முடியும்.
* தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும் பொழுது கூடவே ஒவ்வொரு மாணவரும்
தங்கள் பாடவாரியாகப் பெற்ற மதிப்பெணகளை இந்தப் பகுதியில் தெரிந்து கொள்ளலாம்.

8. அறிவிப்பு பகுதி (Announcement)
* இதில் பள்ளிகளில் வரும் நாட்களில் நடைபெறவிருக்கும் முக்கிய நிகழ்ச்சிகள் குறித்த செய்திகள் குறிப்பிட்ட தேதி வாரியாக வெளியிடப்படும்.
* அனைத்து அறிவிப்புகளைவிடவும் மாணவர்களின் உயிர்நாடியாகக் கருதப்படும் அரசு விடுமுறை நாட்கள் குறித்த அறிவிப்புகள் இதில் முக்கியமாக இடம் பெற்றிருக்கும்.
* பள்ளியில் பருவத்தேர்வுகள் முதல் அரசுப் பொதுத்தேர்வு குறித்த தேதி அட்டவணைப் பட்டியல் குறித்த அறிவிப்புகள் அடங்கியிருக்கும்.


9. தேர்வுக்கு தேவையான குறிப்புகள் (Study materials)
* இந்தப்பகுதியில் மாணவர்களுக்குத் தேவையான தேர்வு காலங்களில் பயன்படும் வகையில் பாடப்புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்ட முக்கிய வினாக்களின் தொகுப்பு PDF வடிவில் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கும்
* மாணவர்கள் தங்கள் தொலைபேசியில் பதிவிறக்கம் செய்து படித்துக் கொள்ளலாம்

10. எங்களை தொடர்புகொள்ள (Contact)
* இந்தப் பகுதியை அனைவரும் பயன்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
* இந்தச் செயலி குறித்த கருத்துக்களை பொது மக்கள் அனைவரும் இதில் பதிவு செய்யலாம். இந்தச் செயலியில் உள்ள நிறை மற்றும் குறைகளை இதில் தெரிவிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.


 இப்படிக்கு
 அரசு உயர்நிலைப்பள்ளி
மிளகனூர், சிவகங்கை மாவட்டம்
தலைமையாசிரியர்
முனைவர் V.M.விநாயகமூர்த்தி
செல் : 9976935585